# | வடசொல் | தமிழ் |
---|---|---|
1 | அகங்காரம் | செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல் |
2 | அகசுமாத்து | தற்செயல், திடீரெனல் |
3 | அகதி | வறியவன், யாருமற்றவன் |
4 | அகந்தை | இறுமாப்பு, செருக்கு |
5 | அகம்பாவம் | தற்பெருமை, செருக்கு |
6 | அகராதி | அகரவரிசை |
7 | அகற்பிதம் | இயல்பு |
8 | அகாதன் | புரட்டன் |
9 | அகாலமரணம் | முதிராச்சாவு |
10 | அகாலம் | தகாக் காலம் |
11 | அகிம்சை | இன்னா செய்யாமை, கொல்லாமை |
12 | அகிலம் | எல்லாம், உலகு, வையம், நிலம் |
13 | அகோசரம் | அறியொணாதது |
14 | அகோரம் | சினக்குறிப்பு, நடுக்கம் |
15 | அகோராத்திரம் | அல்லும் பகலும் |
16 | அக்காரம் | வெல்லம் |
17 | அக்கி | கண், கொப்புளம் |
18 | அக்கிரகாரம் | பார்ப்பனச்சேரி |
19 | அக்கிரமம் | ஒழுங்கின்மை, முறைகேடு |
20 | அக்கிராசனம் | முதலிருக்கை, தலைமை |
21 | அக்கிராசனாதிபதி | அவைததலைவர், முதல்வர் |
22 | அக்கினி | நெருப்பு, தீ, அனல், எரி, தழல் |
23 | அக்கினிகாரியம் | எரியோம்பல் |
24 | அக்கினி நட்சத்திரம் | தீநாள் |
25 | அங்க சேட்டை | உறுப்பு அசைவு |
26 | அங்கம் | உறுப்பு, எலும்பு, அடையாளம் |
27 | அங்கவீனன் | உடற் கேடன், உறுப்பறையன் |
28 | அங்கீகரணம் | அங்கீகாரம், உடன்பாடு, ஒப்பு |
29 | அங்குசம் | யானைத்தோட்டி, கொக்கி |
30 | அங்குட்டம் | பெருவிரல் |
31 | அங்குலம் | விரற்கடை, விரலளவு |
32 | அசந்தர்ப்பம் | நேரமின்மை, காலத்தவறு |
33 | அசமந்தம் | சோம்பல், மடி, மலைவு |
34 | அசரீரி | உருவற்றது, வானொலி |
35 | அசம் | ஆடு |
36 | அசல் (இந்துஸ்தானி) | முதல், மூலம் |
37 | அசாக்கிரத்தை | விழிப்பின்மை, கருத்தின்மை, அசட்டை |
38 | அசாத்தியம் | அருமை, முடிக்கக்கூடாதது |
39 | அசீரணம் | பசியின்மை, செரியாமை |
40 | அசுத்தம் | அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை |
41 | அசுபம் | நன்மையல்லாதது, தீமை, தீயது |
42 | அசுவம் | குதிரை |
43 | அஞ்சனம் | மை, கறுப்பு |
44 | அஞ்ஞாதம் | மறைவு |
45 | அஞ்ஞாதவாசம் | மறைந்துறைதல் |
46 | அஞ்ஞானம் | அறியாமை, இருள், மருள் |
47 | அட்சரம் | எழுத்து |
48 | அட்டகம் | எண்வகை |
49 | அட்டகாசம் | புரளி |
50 | அணிமா | அணுத்தன்மை |
51 | அதிகம் | மிகுதி |
52 | அதிகாந்தம் | பேரழகு |
53 | அதிகாரம் | இயல், நூற்கூறு, பாடு, ஆட்சி |
54 | அதிகாரி | தலைவன், முதல்வன் |
55 | அதிசயம் | புதுமை, வியப்பு |
56 | அதிட்டம் | செல்வம், நல்வினைப்பயன், நன்னுகர்ச்சி |
57 | அதிதி | விருந்தினன், புதியவன் |
58 | அதோகதி | கீழிறக்கம், பள்ளம் |
59 | அத்தமனம், அஸ்தமனம் | சாயங்காலம், மாலை, மறைவு, அடைவு |
60 | அத்தம், அஸ்தம் | கை |
61 | அத்தி, அஸ்தி | எலும்பு |
62 | அத்திபாரம், அஸ்திபாரம் | அடிப்படை, கடைக்கால் |
63 | அத்தியட்சன் | தலைவன், கண்காணி |
64 | அத்தியந்தம் | மிகுதி, மட்டற்றது |
65 | அத்தியாயம் | படலம், நூற்பிரிவு |
66 | அத்திரம், அஸ்திரம் | அம்பு |
67 | அத்துவிதம் | இரண்டற்றது |
68 | அநந்தம் | அளவின்மை, முடிவில்லது |
69 | அநர்த்தம் | பயனின்மை, கேடு, வேறுபாடு |
70 | அநவரதம் | எப்பொழுதும் |
71 | அநாகதம் | நெஞ்சம் |
72 | அநாதி | முன், பழமை, கடவுள் |
73 | அநாதை | யாருமற்றவன் |
74 | அநியாயம் | முறையின்மை, நடுவின்மை, விலக்கு |
75 | அநிருதம் | பொய் |
76 | அநீதி | முறைகேடு |
77 | அநுகூலம் | கைகூடுதல், பயன், உதவி, நன்மை, துணை |
78 | அநுக்கிரகம் | அருளிரக்கம், அருள் |
79 | அநுசரித்தல் | பின்பற்றல், கைக்கொள்ளல் |
80 | அநுட்டானம் | செயற்பாடு, நடைமுறை |
81 | அநுட்டித்தல் | பின்பற்றல் |
82 | அநுதினம் | நாடோறும் |
83 | அநுபந்தம் | பின்சேர்க்கை, தொடர்ச்சி, அடுத்து யாக்கப்படுவது |
84 | அநுபவம் | பழக்கம், நுகர்ச்சி, அழுந்தியறிதல் |
85 | அநுபவித்தல் | துய்த்தல், நுகர்தல், துவ்வல் |
86 | அநுபானம் | துணைமருந்து, கூட்டுமருந்து |
87 | அநுபோகம் | பழக்கம், வழக்கம், ஆட்சி, நுகர்ச்ச்சி, துய்ப்பு |
88 | அநுமதி | உடன்பாடு, விடை, கட்டளை, ஆணை, ஒப்புதல் |
89 | அநுமானம் | ஐயம், வழியளவை |
90 | அநேகம் | பெரும்பான்மை, பல |
91 | அந்தகன் | கூற்றுவன், குருடன் |
92 | அந்தஸ்து | நிலைமை, ஒழுங்கு, நிலை |
93 | அந்தம் | அழகு, முடிவு, குருடு, ஈறு, கேடு, எல்லை |
94 | அந்தரங்கம் | அருமறை, மறைபொருள், உள்ளம், தனிமை |
95 | அந்தரம் | வான், வெளி, இடைவெளி, துனையின்மை, காலம் |
96 | அந்தரவாணி | வானொலி |
97 | அந்நியம் | அயல், வேறு, வேற்றுமை, பிறிது |
98 | அந்நியோந்நியம் | நெருக்கம், ஒற்றுமை, ஒருவர்க்கொருவர் |
99 | அபகரித்தல் | கவர்தல், கொள்ளையிடல், பறித்தல், வவ்வல் |
100 | அபகாரம் | தீங்கு, பொல்லாங்கு, நன்றியில் செயல் |
101 | அபசயம் | தோல்வி |
102 | அபத்தம் | பொய், தவறு |
103 | அபயம் | அடைக்கலம் |
104 | அபரஞானம் | கருவியறிவு, நூலறிவு |
105 | அபராதம் | ஒறுப்புக்கட்டணம், குற்றம், பிழை |
106 | அபவிருத்தி | குறைவு |
107 | அபாண்டம் | பெரும்பொய், பெரும்பழி, இடுபழி |
108 | அபாயம், அபாயகரம் | பேரிடர், அழிவு, கேடு, துன்பம், இடுக்கண் |
109 | அபிடேகம், அபிஷேகம் | திருமுழுக்கு, புதுப்புனலாட்டு |
110 | அபிநயம் | உள்ளக்குறிகாட்டல், கைமெய்காட்ட்டல், கூத்து |
111 | அபிப்பிராயம் | நோக்கம், எண்ணம், உட்கருத்து, உட்கோள், கொள்கை |
112 | அபிமானம் | பற்று, நேயம், செருக்கு |
113 | அபிவிருத்தி | பெருக்கம், ஆக்கம், வளர்ச்சி |
114 | அபூர்வம் | அருமை, அரிய பொருள் |
115 | அபேட்சை | அவா, விருப்பம் |
116 | அபேதம் | வேற்றுமையின்மை, வேறன்மை |
117 | அப்பியாசம் | பழக்கம், பயிற்சி |
118 | அப்பிராணி | ஏழை, கரவிலான், பேதை |
119 | அப்பு | புனல் |
120 | அமாபஷம் | தேய்பிறை |
121 | அமாவாசை | புதுப்பிறை, பிறை, யுவா |
122 | அமுது | சோறு, அடிசில், இனிமை |
123 | அம்சம் | வகை, அன்னப்புள், காலம், எண், பங்கு |
124 | அம்பாரம் – குவியல் | |
125 | அம்பிகை | தாய், அம்மை |
126 | அயோக்கியதை | தகுதியின்மை, தகாதது |
127 | அரம்பை | ரம்பை, தெய்வப்பெண், அரிவை, வான்மகள் |
128 | அரவம் | ஒலி, பாம்பு |
129 | அராகம் | விருப்பு |
130 | அருணோதயம் | வைகறை, விடியல், கதிரோன்வருகை |
131 | அருத்தம், அர்த்தம் | பொருள், பாதி |
132 | அருவம் | உருவின்மை, அழகின்மை |
133 | அர்ச்சனை, அருச்சனை | பூவழிபாடு, மலர் தூவிவழிபாடு, பூசை |
134 | அர்த்தசாமம் | நள்ளிரவு |
135 | அர்த்தநாரீசுரன் | மங்கைபங்கன், மாதிருக்கும் பாதியன் |
136 | அர்ப்பணம் | நீரோடுகொடுத்தல், உரிமைப் படுத்தல், ஒப்புவித்தல் |
137 | அலங்காரம் | அழகு, ஒப்பனை, அணி, புனைவு |
138 | அலட்சியம் | பொருட்படுத்தாமை, கருத்தின்மை |
139 | அலுவா | கோதுமைத் தேம்பாகு |
140 | அவகாசம் | ஒழிவு, ஓய்வு |
141 | அவசரம் | விரைவு, பரபரப்பு, சுருக்கு, பதைப்பு |
142 | அவசியம் | முதன்மை, கட்டாயம், இன்றியமையாமை |
143 | அவதாரம் | பிறப்பு, இறங்குகை |
144 | அவதி | துன்பம் |
145 | அவத்தை | நிலை, துன்பம், நிலைமை |
146 | அவதூறு | பழிச்சொல் |
147 | அவமானம் | மானக்கேடு, புகழின்மை, இழிவு |
148 | அவயம் | உறுப்பு |
149 | அற்பம் | சிறுமை, அணு, புன்மை |
150 | அற்புதம் | புதுமை, வியப்பு, அருள்நிகழ்ச்சி, அரியசெயல் |
151 | அனுபவம் | துய்ப்பு |
152 | அனுபோகம் | நுகர்ச்சி |
153 | அன்னசத்திரம் | ஊட்டுப்புரை |
154 | ஆகாசம் | விண், வெளி, வான், விசும்பு, வானம் |
155 | ஆகாயவிமானம் | வானவூர்தி |
156 | ஆகாரம் | உணவு, அடிசில், |
157 | ஆகுலம் – ஆரவாரம், வருத்தம் | |
158 | ஆக்ஞேயம் | புருவநடு |
159 | ஆசங்கை | ஐயம |
160 | ஆசமனம் | குடித்தல் |
161 | ஆங்காரம் | இறுமாப்பு, செருக்கு, தருக்கு |
162 | ஆசர், ஆஜர் (உருது) | நேர்வருகை |
163 | ஆசனம் | இருக்கை, அணை |
164 | ஆசனவாய் | எருவாய், மலவாய் |
165 | ஆசாபாசம் | அவாக்கட்டு, அன்பு, உலகப்பற்று |
166 | ஆசாமி (உருது) | ஆள் |
167 | ஆசாரம் – ஒழுக்கம், வழக்கம், நன்னடை, துப்புரவு | |
168 | ஆசியம் | எள்ளல், நகை, சிரிப்பு |
169 | ஆசிரமம் | பள்ளி, பாழி, முனிவருறையுள் |
170 | ஆசீர்வாதம் | வாழ்த்துரை |
171 | ஆசை | விருப்பம், அவா, பற்று, வேட்கை, விழைவு |
172 | ஆச்சரியம் | புதுமை, வியப்பு, இறும்பூது |
173 | ஆஸ்தி | பொருள், செல்வம் |
174 | ஆஸ்திகன் | கடவுட்கொள்கையன் |
175 | ஆஸ்பத்திரி | மருந்துச்சாலை |
176 | ஆக்கிராணம் | மூக்கு |
177 | ஆக்ஞை | ஆணை, கட்டளை |
178 | ஆடம்பரம் | ஆரவாரம் |
179 | ஆட்சேபம் | தடை, மறுப்பு, எதிர்மொழி |
180 | ஆதரவு | துணை, உதவி, சார்பு, பற்றுக்கோடு, நிலைக்களன் |
181 | ஆதாரம் | பற்றுக்கோடு, நிலைக்களன், களைக்கண், சான்று, அடிப்படை |
182 | ஆதி | முதல், பழமை, அடி, தொடக்கம், காரணம், எழுவாய், கடவுள் |
183 | ஆதிக்கம் | உரிமை, முதன்மை, மேன்மை, தலைமை, மேலீடு |
184 | ஆதியந்தம் | அடிமுதல் |
185 | ஆதியோடந்தமாய் | ஒன்றும் விடாமல், முதலிலிருந்து கடைசிவரை |
186 | ஆதிரம் | நெய் |
187 | ஆதுலம் | வறுமை |
188 | ஆத்திரம் | விரைவு, பரபரப்பு |
189 | ஆத்துமா | ஆன்மா, உயிர் |
190 | ஆநந்தம் | இன்பம் |
191 | ஆநந்தபரவசம் | இன்பவயம் |
192 | ஆந்திரதேசம் | தெலுங்குநாடு |
193 | ஆபத்து | இடர், துன்பம், இக்கட்டு, ஊறுபாடு |
194 | ஆபாசம் | அருவருப்பு, பொய், சிதைவு, அளவைப்போலி |
195 | ஆப்தம் | அன்பு, நட்பு |
196 | ஆமோதித்தல் | உடன்படல், வழிமொழிதல், மகிழ்தல் |
197 | ஆயத்தம் (ஹிந்தி) | முயற்சி, முன்னேற்பாடு |
198 | ஆயஸாம் | களைப்பு, இளைப்பு, சோர்வு, அயர்வு, மயக்கம் |
199 | ஆயுசு, ஆயுள் | வாழ்நாள், ஆண்டு |
200 | ஆயுதம் | கருவி, படைக்கலம், படை, வாள் |
201 | ஆரம் | பூமாலை, தொடையல் |
202 | ஆரம்பம் | துவக்கம், தொடக்கம் |
203 | ஆராதனை | வழிபாடு |
204 | ஆராதித்தல் | வழிபடுதல் |
205 | ஆரியம் | வடமொழி |
206 | ஆரியர் | மிலேச்சர் |
207 | ஆருடம் | முன்னறிதல் |
208 | ஆரோகம் | ஏற்றுதல் |
209 | ஆரோக்கியம் | நலம், நோயின்மை |
210 | ஆலயம் | கோவில் |
211 | ஆலிங்கனம் | தழுவல் |
212 | ஆலோசனை | சூழ்ச்சி, சூழ்தல், ஓர்வு, எண்ணம், ஆராய்ச்சி |
213 | ஆவசியம் | கட்டாயம், முதன்மை, இன்றியமையாமை |
214 | ஆவலாதி | புறங்கூற்று, புறந்தூற்றல் |
215 | ஆவேசம் | மருள், தெய்வமேறல், உட்புகல், பேய் |
216 | இகம் | இவ்வுலகம், இவ்விடம், இப்பிறப்பு |
217 | இக்கணம் | இப்போது |
218 | இச்சகம் | முகமன் |
219 | இச்சை | விருப்பம், அவா, விழைவு, வேட்கை |
220 | இடங்கம் | உளி |
221 | இடபம் | எருது, காளை, ஏறு |
222 | இடம்பம் | ஆரவாரம், வீண்பெருமை |
223 | இட்டம், இஷ்டம் | அன்பு, விருப்பம் |
224 | இஷ்டன் | நண்பன் |
225 | இதம்,ஹிதம் | இனிமை, நன்மை, அன்பு, அறம் |
226 | இதரம் | வேறு, அயல், அறிவு, பகைமை |
227 | இதாதீதம் | நன்மைதீமை |
228 | இந்திரியங்கள் | ஐம்பொறிகள் |
229 | இமிசை | கடுந்துன்பம், வருத்தம் |
230 | இயந்திரம் | பொறி, மறைமொழித்தகடு |
231 | இயமன் | எமன், கூற்றுவன், காலன், மறலி |
232 | இரகசியம் | மறைபொருள், மறை, அற்றம் |
233 | இரசம் | சாறு, மிளகுநீர் |
234 | இரசவாதம் | பொன்னாக்கல் |
235 | இரசாபாசம் | அருவருப்பு, ஒழுங்கின்மை |
236 | இரசிகன் | சுவைஞன் |
237 | இரசித்தல் – சுவைத்தல் | |
238 | இரட்சித்தல் | காப்பாற்றல், புரத்தல், ஓம்புதல் |
239 | இரணவைத்தியம் | புண்மருத்துவம், அருவைமருத்துவம் |
240 | இரதம் | தேர் |
241 | இரத்தம் | குருதி, செந்நீர் |
242 | இரத்தினம் | மாமணி, செம்மணி |
243 | இரம்பம் | ஈர்வாள் |
244 | இராகம் | இசை, பண், அவா |
245 | இராஜஸ்ரீ – திரு | |
246 | இராஜா | அரையன், மன்னன் |
247 | இராஜதானி | அரசர் தலைநகர் |
248 | இராசதம் | மனவெழுச்சி |
249 | இராசி | ஓரை |
250 | இராச்சியம் | அரசியல், நாடு |
251 | இராணுவம் | போர்ப்படை |
252 | இராத்திரி | இரவு, கங்குல் |
253 | இருசால் | இறைப்பணம், திறை |
254 | இருடி | முனிவன், தவசி, துறவி |
255 | இருதயம், இதயம் | நெஞ்சம், உள்ளம், அன்பு |
256 | இருது, ருது | பருவம், மகளிர் முதற்பூப்பு |
257 | இருதுமங்களஸ்நானம் | பூப்புநன்னீராட்டு |
258 | இருதுசாந்தி | பூப்புக்கழிப்பு |
259 | இரேகை | வரி, எழுத்து, கயிறை, நிறை, தொடர் |
260 | இலகான் (இந்துஸ்) | கடிவாளம் |
261 | இலகிமா | மென்மை |
262 | இலக்கம், இலட்சம் | எண், நூறாயிரம் |
263 | இலக்குமி | திருமகள், அழகு, செல்வம் |
264 | இலஞ்சம் | கைக்கூலி, கையுறை |
265 | இலட்சணம் | அழகு, பார்வை |
266 | இலட்சியம் | குறிக்கோள் |
267 | இலயம், லயம் | ஒடுக்கம், அழிவு |
268 | இலவசம் | விலையின்மை |
269 | இலவணம் | உப்பு |
270 | இலவுகிகம் | உலகியல், உலகப்போக்கு |
271 | இலாகா | ஆட்சி, எல்லை |
272 | இலாகிரி | வெறி, மயக்கம் |
273 | இலாடம் | காற்பறளை |
274 | இலாபம் | ஊதியம், மிச்சம், பேறு |
275 | இலாபநஷ்டம் | கூடுதல் குறைதல், ஊதியமும் பொருட்கேடும் |
276 | இலாயம் | குதிரைப்பந்தி |
277 | இலாவாதேவி | கொடுக்கல் வாங்கல், பண்டமாற்று |
278 | இலிங்கம் | குறி, அடையாளம் |
279 | இலேகியம் | பாகுமருந்து, இளகம் |
280 | இலேசு | மேலாடை |
281 | ஈசன் | தலைவன், ஆள்வோன் |
282 | ஈசானம் | வடகீழ்ப்பால் |
283 | ஈசுரநிச்சயம் | கடவுளுண்மை |
284 | ஈடணம் | விருப்பம் |
285 | ஈநம் | இழிவு, குறைபாடு, குறைவு |
286 | உக்கிரம் | கடுமை, வெப்பம், சினம், ஊக்கம், மிகுதி |
287 | உக்கிராணம் | களஞ்சியம், சரக்கறை |
288 | உசிதம் | உயர்வு, சிறப்பு, மேன்மை, தகுதி, ஒழுங்கு |
289 | உச்சந்தம் | தணிவு |
290 | உச்சரிப்பு | எழுத்தோசை |
291 | உச்சி | மேடு, முகடு |
292 | உஷ்ணம் | வெப்பம், சூடு |
293 | உதயம் | காலை, விடியல், பிறப்பு, வெளிப்படல், தோற்றம் |
294 | உதரம் | வயிறு |
295 | உதாரம், உதாரகுணம் | வள்ளன்மை, தண்ணளி, ஈகைத்தன்மை |
296 | உதாரணம் | எடுத்துக்காட்டு, சான்று |
297 | உதித்தல் | பிதற்றல், தோன்றுதல் |
298 | உதிரம் | செந்நீர், குருதி |
299 | உத்தமம் | உண்மை, மேன்மை |
300 | உத்தமி | கற்புடையவள் |
301 | உத்தரம் | மறுமொழி |
302 | உத்தரவு | கட்டளை |
303 | உத்தியோகம் | அலுவல், முயற்சி, தொழில் |
304 | உத்தேசம் | கருத்து, மதிப்பு, ஏறக்குறைய |
305 | உந்நதம் | உயர்ச்சி, மேன்மை |
306 | உபகரணம் | கொடுத்தல், உதவிப்பொருள், கருவிப்பொருள் |
307 | உபகாரம் | வரவேற்பு, முகமன், வேளாண்மை |
308 | உபதேசம் | அருண்மொழி, அறிவுரை |
309 | உபத்தம் | கருவாய் |
310 | உபத்திரவம் | இடர், இக்கட்டு, துன்பம், வருத்தம், தடை |
311 | உபநதி | கிளையாறு |
312 | உபநயநம் | பூணூற்சடங்கு, வழிநடத்துதல், மூக்குக்கண்ணாடி |
313 | உபந்நியாசம் | சொற்பொழிவு |
314 | உபயோகம் | பயன் |
315 | உபவனம் | பூஞ்சோலை |
316 | உபாசனை | வழிபாடு, வணக்கம் |
317 | உபாதி | நோய், துன்பம் |
318 | உபாத்தியாயன் | ஆசிரியன், கற்பிப்போன், கணக்காயன் |
319 | உபாத்தியாயினி | ஆசிரியை |
320 | உபாயம் | சூழ்ச்சி நொய்மை, எளிது, சிறிது |
321 | உபேட்சை | அசட்டை, விருப்பின்மை, வெறுப்பு |
322 | உயிர்ப்பிராணி | உயிர்ப்பொருள் |
323 | உருக்குமணி | பொன்மணி |
324 | உருசி | சுவை |
325 | உருத்திராக்கம் | சிவமணி, அக்குமணி |
326 | உரூபித்தல் | மெய்ப்பித்தல் |
327 | உரொக்கம் | கைப்பணம், இருப்பு, மொத்த இருப்பு |
328 | உரோகம் | நோய், ஒளியின்மை |
329 | உரோமம் | மயிர், முடி, குஞ்சி |
330 | உலகப்பிரசித்தம் | எங்கும் பரந்தபுகழ் |
331 | உலோகம் | உலகம், வெள்ளி, பொன், செம்பு, முதலியன |
332 | உலோபம் | ஈயாமை, இவறன்மை, கடும்பற்றுள்ளம் |
333 | உல்லாசம் | மகிழ்ச்சி, விளையாட்டு, உள்ளக்களிப்பு |
334 | உற்சவம் | திருவிழா, திருநாள் |
335 | ஊகித்தல் | நினைத்தல், ஓர்தல் |
336 | ஊநம் | குறைவு, இழிவு |
337 | ஊர்ச்சிதம் | உறுதி, நிலைப்படுதல் |
338 | எக்கியம் | வேள்வி |
339 | எசமானன் | தலைவன், முதல்வன் |
340 | எதார்த்தம் | உறுதி, உண்மை |
341 | எதேச்சம் | விருப்பப்படி |
342 | எவ்வநம், யௌவநம் | இளமை, அழகு |
343 | ஏகதேசம் | ஒருபால், ஒருபுடை, சிறுபான்மை |
344 | ஏகம் | ஒன்று, தனிமை |
345 | ஏகாங்கி | தனியன், துறவி |
346 | ஏகாதிபத்தியம் | தனியாட்சி |
347 | ஏகாந்தம் | தனிமை, ஒருமுடிவு |
348 | ஏடணை | விருப்பம் |
349 | ஏதம் | குற்றம், துன்பம், தீங்கு |
350 | ஏது | காரணம் |
351 | ஏனம் | பன்றி |
352 | ஐக்கியம் | ஒற்றுமை |
353 | ஐச்வரியம் | செல்வம், திரு |
354 | ஐதிகம் | உலகுரை |
355 | ஓமம் | வேள்வி |
356 | ஒளடதம் | மருந்து |
357 | ஒளபாசனம் | வேள்வித்தீயோகம், புகை, உணவொழிநோன்பு, எரியோம்பல் |
358 | கங்கணம் | காப்பு |
359 | கடகம் | வாள் |
360 | கட்சி, கஷி | பக்கம், சார்பு |
361 | கஷாயம் | மருந்துக்குடிநீர் |
362 | கடினம் | வன்மை, கடுமை, வருத்தம், கொடுமை |
363 | கடூரம் | கொடுமை |
364 | கஷ்டம் | துன்பம், வருத்தம் |
365 | கஷ்டசாத்தியம் | அரிதின்முடிவது |
366 | கணபதி | பிள்ளையார் |
367 | கணிதம் | கணக்கு |
368 | கண்டம் | நிலப்பிரிவு, பிரிவு, துண்டு, கட்டி, மிடறு, கழுத்து |
369 | கண்டனம் | மறுப்பு |
370 | கண்திருஷ்டி | கண்ணேறு, கண்ணெச்சில் |
371 | கதம்பம் | கூட்டம், மணப்பொருட்கூட்டு |
372 | கநகம் | பொன் |
373 | கந்தமூலம் | கிழங்கு |
374 | கந்தம் | மணம், நாற்றம் |
375 | கந்துகம் | குதிரை, பந்து |
376 | கந்நிகை | மணமாகாதவள், இளம்பெண் |
377 | கபம் | கோழை |
378 | கபோதி | குருடன் |
379 | கமலம் | தாமைரை |
380 | கம்பீரம் | செருக்கு, உயர்தோற்றம், பெருமை, ஆழம் |
381 | கயரோகம் | எலும்புருக்கிநோய் |
382 | கயிலாசம். கயிலாயம் | சிவப்பேறு, நொடித்தான்மலை |
383 | கரகோஷம் | கைதட்டுதல் |
384 | கருடன் | கலுழன் |
385 | கருணை | அருள், இரக்கம் |
386 | கருத்தா, கர்த்தா | தலைவன், வினைமுதல், ஆக்கியோன், நூலாசிரியன் |
387 | கருமம் | வினை, தொழில் |
388 | கர்க்கடகம் | நண்டு |
389 | கர்ச்சனை | முழக்கம் |
390 | கர்ப்பக்கிரகம் | அகநாழிகை, திருஉள் நாழிகை |
391 | கர்ப்பவதி | சூலி |
392 | கர்வம் | செருக்கு |
393 | கலசம் | குடம் |
394 | கலாசாலை | கல்லூரி |
395 | கல்யாணம் | மணம், மன்றல் |
396 | கவி | செய்யுள், பாவலன், பாட்டு |
397 | கனம் | சுமை, பளுவு |
398 | காசம் | ஈளைநோய், இருமல்நோய் |
399 | காஷாயம் | காவி |
400 | காஷ்டம் | விறகு |
401 | காயம் | உடல், யாக்கை, வான் |
402 | காரகன் | செய்பவன் |
403 | காரியதரிசி | அமைச்சன், செயலாளன் |
404 | காரியஸ்தன் | செயலாளன் |
405 | காலக்கிரமம் | கால ஒழுங்கு |
406 | காலச்சேபம் | வாழ்க்கை, நாட்கழித்தல் |
407 | காளம் | எருமை, முகில் |
408 | கிஸ்தி (இந்துஸ்) | திறை |
409 | கிஞ்சுகம் | கிளி |
410 | கிடாரம் | கொப்புரை |
411 | கியாதி | புகழ், மேன்மை |
412 | கிரகசாரம் | கோள்நிலை, கோட்சாரம் |
413 | கிரகணம் | பற்றுதல், பிடித்தல் |
414 | கிரகம் | வீடு, கோள், பற்றுதல், பிடிப்பு |
415 | கிரகஸ்தம் | இல்லறநிலை |
416 | கிரகித்தல் | பற்றுதல், இழுத்தல், கவர்தல், உணர்தல் |
417 | கிரந்தம் | நூல் |
418 | கிரமம் | ஒழுங்கு, முறைமை |
419 | கிரயம் | விலை |
420 | கிராதகன் | குறவன், வேட்டுவன் |
421 | கிராமம் | சிற்றூர் |
422 | கிரியை | தொழில், செயல், வினை, சடங்கு |
423 | கிரீடம் | முடி |
424 | கிருஷி | பயிர், உழவு, பயிர்செய்கை |
425 | கிருஷ்ணபஷம் | தேய்பிறை |
426 | கிருபை | அருள், இரக்கம் |
427 | கிருமி | பூச்சி, புழு |
428 | கிலம் | அழிவு |
429 | கிலேசம் | அச்சம், கவலை, துன்பம் |
430 | கீணம், ஷீணம் | கேடு, சிதைவு |
431 | கீதம் | இசை, இசைப்பாட்டு |
432 | கீர்த்தி | புகழ், இசை |
433 | குக்குடம் | கோழி |
434 | குலசம் | நலம், நன்மை |
435 | குஞ்சரம் | யானை |
436 | குஷ்டம் | தொழுநோய், பெருநோய் |
437 | குணம் | இயல்பு |
438 | குதூகலம் | பெருங்களிப்பு, பெருமகிழ்ச்சி |
439 | குபேரன் | பெருஞ்செல்வன், செல்வக்கடவுள் |
440 | குமரி, குமாரி | நங்கை, மணமாகப்பெண், புதல்வி, மகள் |
441 | கும்பகோணம் | குடமூக்கு |
442 | கும்பாபிஷேகம் | குடமுழுக்கு |
443 | கும்பம் | குடம் |
444 | குருபக்தி | ஆசானிடத்தன்பு, குருவினிடத்தன்பு |
445 | குரூபி | உருவிலி, அழகிலி |
446 | குரூரம் | கொடுமை, அஞ்சாமை, தறுகண், ஈரமின்மை |
447 | குரோதம் | உட்பகை, சினம் |
448 | குலஸ்திரீ | குலமகள் |
449 | குன்மம் | சூலை, வயிற்றுவலி |
450 | கூசுமாண்டம் | பூசுணி |
451 | கூபம் | கிணறு, கூவம் |
452 | கூர்மம் | ஆமை |
453 | கேலி | பகிடி |
454 | கைங்கரியம் | தொண்டு, பணி |
455 | கோஷ்டம் | கூட்டம், மணப்பொருள், பேரொலி |
456 | கோஷம் | முழக்கம் |
457 | கோஷ்டி | கூட்டம் |
458 | கோதண்டம் | வில் |
459 | கோத்திரம் | குலம், வகுப்பு, மரபு |
460 | கோமயம் | ஆனீர் |
461 | கோரம் | கொடுமை, அச்சம் |
462 | சகசம் | இயற்கை, ஒற்றுமை |
463 | சகடம், சகடு | வண்டி |
464 | சகலம் | எல்லாம் |
465 | சகலர் | மும்மலக்கட்டினர் |
466 | சகவாசம் | கூடவிருத்தல், உடனுறைதல், பழக்கம், சேர்க்கை, நட்பு |
467 | சகன் | தோழன், கூட்டாளி |
468 | சகாயம் | உதவி, துணை, நயம், நன்மை, மலிவு, பயன் |
469 | சகித்தல் | பொறுத்தல் |
470 | சகுனம் | குறி |
471 | சகோதரன் | உடன்பிறந்தான், தமையன், தம்பி |
472 | சகோதரி | உடன்பிறந்தாள், தம்க்கை, தங்கை |
473 | சக்கரம் | நிலாமுகிப்புள் |
474 | சக்காதரன் | திருமால் |
475 | சக்கரவர்த்தி | தனியரசாள்வோன், மன்னர்மன்னன், அரசர்க்கரசன் |
476 | சக்தி | ஆற்றல், வல்லமை, வலி |
477 | சங்கடம் | நெருக்கம், துன்பம், கேடு, வருத்தம் |
478 | சங்கதி | செய்தி |
479 | சங்கமம் | ஆறுகடலோடுகூடுமிடம்,கூடுகை,இயங்குதிணைப்பொருள்,அசைவன |
480 | சங்கற்பம் | நினைப்பளவு |
481 | சங்காரம் | அழித்தல் |
482 | சங்கிராந்தி | திங்கட்பிறப்பு, ஒன்றினின்று பிரிதொன்றின்கட் செல்லல் |
483 | சங்கீதம் | இசை |
484 | சங்கேதம் | குறியீடு, நினைவு |
485 | சங்கை | எண், ஐயம், அச்சம் |
486 | சந்கோசம் | கூச்சம், வெட்கம், உட்புகுதல் |
487 | சச்சிதானந்தம் | உண்மையறிவின்மை |
488 | சஞ்சலம் | கலக்கம், கவலை, துன்பம், அசைவு |
489 | சஞ்சிதம் | ஈட்டியது, எஞ்சியது |
490 | சடுதி, சடிதி (இந்துஸ்) | விரைவு |
491 | சஷ்டியப்தபூர்த்தி | அறுபதாம் ஆண்டு நிறைவு |
492 | சட்சு | கண் |
493 | சண்டித்தனம் | முரட்டுத்தனம் |
494 | சதா | எப்பொழுதும் |
495 | சதானந்தம் | இடடையறாவின்பம் |
496 | சதுரம் | அறிவுடைமை, திறமை, நாற்பக்கம் |
497 | சத்தம் | ஓசை, ஒலி, சொல், ஏழு |
498 | சத்தியம் | உண்மை, ஆணை, மெய் |
499 | சத்திரம் | உணவுச்சாலை, ஊட்டுப்புரை, சாவடி, குடை |
500 | சத்துரு | பகைவன் |
501 | சத்துவம் | விறல், மெய்ப்படுதல் |
502 | சந்ததம் | எப்பொழுதும் |
503 | சந்ததி | வழிவழி, பிள்ளை, எச்சம், கால்வழி |
504 | சந்தர்ப்பம் | சமயம், அற்றம், நேரம் |
505 | சந்தியாவந்தனம் | காலை மாலை வழிபாடு |
506 | சந்திரன் | திங்கள், தண்கதிர், நிலவு, மதி, அம்புலி, பிறை |
507 | சந்து | முடுக்கு, இயங்கும் உயிர்,தூது, பிளப்பு, பொருத்து, இரண்டு, மூட்டு |
508 | சந்துஷ்டி | மகிழ்ச்சி |
509 | சந்தோஷம் | மகிழ்ச்சி, உவகை, களிப்பு |
510 | சந்நிதி, சந்நிதானம் | திருமுன் |
511 | சந்நியாசம் | துறவு, துறவறம் |
512 | சந்நியாசி | துறவி |
513 | சபதம் | வஞ்சினம், ஆணை |
514 | சபம், ஜெபம் | உருவேற்றல் |
515 | சபா, சபை | அவை, மன்றம், கழகம், அரங்கம் |
516 | சமஸ்கிருதம் | நன்றாகச்செய்யப்பட்டது, வடமொழி |
517 | சமத்தன், சமர்த்தன் | வல்லவன், திறமையாளன் |
518 | சமத்துவம் | ஒத்த உரிமை, ஒன்று படல் |
519 | சமயம் | பொழுது, நேரம், காலம் |
520 | சமயோசிதம் | காலப்பொருத்தம், தக்கநேரம் |
521 | சமரசம் | போது, வேறுபாடின்மை |
522 | சமாசம் | கழகம், கூட்டம் |
523 | சமாசாரம் | செய்தி |
524 | சமாதானம் | அமைதி, இணக்கம், தணிவு, உடன்பாடு, தக்க விடை |
525 | சமாதி | அமைதி, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு |
526 | சமாநம் | உவமை, ஒப்பு, இணை |
527 | சமிக்ஞை | குறிகாட்டல் |
528 | சமீபம் | அருகு, அண்மை, மருங்கு |
529 | சமூகம் | நேர், திருமுன் |
530 | சமுதாயம், சமூகம் | கூட்டம் |
531 | சமுத்திரம் | கடல் |
532 | சமேதம் | கூட இருத்தல் |
533 | சம்ஸாரம் | குடும்பம் |
534 | சமஸ்கிருதம் | வடமொழி |
535 | சம்பத்து | செல்வம் |
536 | சம்பந்தம் | உறவு, பற்று, இயைபு, சார்பு, தொடர்பு, பொருத்தம் |
537 | சம்பவம் | நிகழ்ச்சி, செயல், |
538 | சம்பாஷணை | உரையாடல் |
539 | சம்பாதித்தல் | ஈட்டல், தேடல், தொகுத்தல் |
540 | சம்பிரதாயம் | தொன்று தொட்ட வழக்கு, முன்னோர் நடை, பண்டைமுறை |
541 | சம்பூரணம் | நிறைவு |
542 | சம்மதம் | உடன்பாடு, ஒப்பு |
543 | சயநம் | படுக்கை, உறக்கம் |
544 | சயம், ஜெயம் | வெற்றி |
545 | சயிலம் | மலை |
546 | சரசம் | இனிய பண்பு, இனிய விளையாட்டு |
547 | சரசுவதி | கலைமகள், நாமகள் |
548 | சரணம் | அடைக்கலம், வணக்கம், கால், திருவடி |
549 | சரணாகதி | புகலடைதல், அடைக்கலம் புகுதல் |
550 | சரணாரவிந்தம் | திருவடித்தாமைரை |
551 | சரம் | மாலை, அம்பு |
552 | சரவணம் | நாணல், பொய்கை |
553 | சரிதம், சரித்திரம் | வரலாறு |
554 | சரீரம் | உடல், யாக்கை, மெய் |
555 | சர்ப்பம் | பாம்பு |
556 | சருமம் | தோல் |
557 | சருவம் | எல்லாம் |
558 | சரோசம் | தாமரை |
559 | சர்வகலாசாலை | பல்கலைக்கழகம் |
560 | சர்வமானியம் | இறையிலி |
561 | சர்வேஸ்வரன் | எப்பொருட்கும் இறைவன் |
562 | சலசம் | தாமரை |
563 | சலசந்தி | கடலிணைக்கால் |
564 | சலசாட்சி | தாமரைக்கண்ணி |
565 | சலம், ஜலம் | நீர் |
566 | சலதோஷம் | நீர்க்கோவை |
567 | சலநம் | அசைவு |
568 | சல்லாபம் | உரையாடல் |
569 | சவம் | பிணம் |
570 | சனம், ஜனம் | மக்கள், நரல் |
571 | சனனம், சன்மம் | பிறப்பு |
572 | சனி | காரி |
573 | சன்மார்க்கம் | நன்னெறி |
574 | சன்மானம் | பரிசு |
575 | சன்னல் | பலகணி,சாளரம்; திட்டிவாயில். |
576 | சாகரம் | கடல் |
577 | சாக்கிரதை | விழிப்பு, உன்னிப்பு, எச்சரிக்கை |
578 | சாக்கிரம் | நனவு |
579 | சாகை | தங்குமிடம், வீடு |
580 | சாசனம் | முறி |
581 | சாசுவதம் | அழியாமை, அசையா நிலை, உறுதி, வீடுபேறு |
582 | சாடி | தாழி |
583 | சாட்சி | சான்று, கரி |
584 | சாஷ்டாங்கம் | எட்டுறுப்பு |
585 | சாதகம் | பயிற்சி, பிறந்தநாடகுறிப்பு, உதவி, காரியங்கைகூடல் |
586 | சாதம் | சோறு |
587 | சாதனம் | கருவி, இடம், பயிற்சி, உறுதிமுறி, அடையாளம், முயற்சி கைகூடல் |
588 | சாதாரணம் | பொது |
589 | சாதி | இனம், குலம், வகுப்பு |
590 | சாதித்தல் | நிலைநிறுத்தல் |
591 | சாதியாசாரம் | குலஒழுக்கம் |
592 | சாது | துறவி |
593 | சாதுரியம் | திறமை, வன்மை |
594 | சாத்திரம் | கலை, நூல் |
595 | சாத்மிகம், சாத்துவிகம் | அமைதித்தன்மை |
596 | சாந்தம் | அமைதி, பொறுமை |
597 | சாந்திரம் | நெருக்கம், திங்கட்டொடர்புடையது |
598 | சாபம் | தீமொழி, வசவு, வில் |
599 | சாமர்த்தியம் | வல்லமை, திறமை, கூறுபாடு |
600 | சாமான் | பொருள்கள், தட்டுமுட்டுகள் |
601 | சாமி, சுவாமி | கடவுள், தலைவன், அடிகள் |
602 | சாமீப்பியம் | சிவனருகிருப்பு |
603 | சாயை | நிழல் |
604 | சாயுச்சியம் | சிவப்பேறடைவு |
605 | சாரதி | வலவன் |
606 | சாராம்சம் | சிறந்த பகுதி |
607 | சாரீரம் | இனிய குரல், இன்னிசை, உடற்றொடர்பு |
608 | சாரூபம் | சிவனுருவம் |
609 | சாலோகம் | சிவவுலகு |
610 | சாவகாசம் | ஒழிவு, ஓய்வு, வசதி, விரைவின்மை |
611 | சாவதானம் | ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு |
612 | சிகரம் | தலை, மலை, உச்சி, முகடு, குவடு |
613 | சிகிச்சை – மருத்துவம், பரிகாரம் | |
614 | சிகை | குடுமி, கூந்தல் |
615 | சிங்கம், சிம்ஹம் | அரிமா, ஏறு |
616 | சிங்காசனம் | அரியணை |
617 | சிங்காரம் | ஒப்பனை, திருத்தம், அழகு |
618 | சிங்குவை | வாய் |
619 | சிசு | குழந்தை, மகவு |
620 | சிசுருஷை | பணிவிடை |
621 | சிட்சை, சிஷை | கற்பித்தல், கல்வி பயிற்றல், ஒறுத்தல் |
622 | சிருட்டி, சிருஷ்டி | படைப்பு |
623 | சித்தம் | உள்ளம், நினைவு, கருத்து |
624 | சித்தி | பேறு, ஆக்கம் |
625 | சித்திரம் | ஓவியம், படம் |
626 | சித்திரவதை | வன்கொலை |
627 | சிநேகம், சிநேகிதம் | நட்பு, கேண்மை |
628 | சிரஞ்சீவி | நீடுவாழ்வோன் |
629 | சிரத்தை | அன்பு, முதன்மை, உளத்திட்பம், விருப்பு |
630 | சிரமம் | துன்பம், தொல்லை |
631 | சிரவணம் | கேள்வி |
632 | சிரார்த்தம் | இறந்தநாட்கடன் |
633 | சிருட்டி | படைத்தல், ஸ்த்ரீதனம், ஸ்ரீதனம் – மகளுக்குக்கொடுக்கும் கொடை, மகட்கொடை |
634 | சிரேஷ்டம் | சிறப்பு |
635 | சிரேஷ்டன் | தலைவன், மூத்தோன் |
636 | சிலாகித்தல் | புகழ்தல் |
637 | சிலாக்கியம் | மேன்மை, நன்மை |
638 | சிலேட்டுமம் | சளி, கோழை |
639 | சிவிகை | பல்லக்கு |
640 | சிற்பம் | கற்றச்சு |
641 | சின்னம் | அடையாளம் |
642 | சின்னாபின்னம் | உருக்குலைவு |
643 | ஸ்ரீமத் | திருவாளர் |
644 | ஸ்ரீலஸ்ரீ | மறைத்திருவாளர் |
645 | சீக்கிரம் | விரைவு, ஒல்லை, கடிது |
646 | சீடன் | மாணாக்கன் |
647 | சீணதசை | அழிவுக்காலம், மழுக்கம் |
648 | சீதபேதி | வயிற்றளைச்சல் |
649 | சீதம், சீதளம் | குளிர்ச்சி |
650 | சீதோஷ்ணம் | தட்பவெப்பம் |
651 | சீமந்தம் | சூல்காப்பிடுஞ்சடங்கு |
652 | சீமந்த புத்திரன் | தலைமகன் |
653 | சீமந்தினி | பெண்மகள் |
654 | சீரணம் | செரித்தல், பழுது |
655 | சீர்ணோத்தாரணம் | பழுதுபார்த்தல் |
656 | சீலம் | ஒழுக்கம் |
657 | சீவசெந்து | உயிர்ப்பொருள் |
658 | சீவகாருண்ணியம் – உயிர்களிடத்தன்பு, அருள் ஒழுக்கம் | |
659 | சீவனம் | பிழைப்பு |
660 | சீவியம் | வாழ்நாள், பிழைப்பு, வாழ்க்கை |
661 | சுகந்தம் | நறுமணம் |
662 | சுகம் | நலம், இன்பம் |
663 | சுகாதாரம் | நலவழி |
664 | சுகிர்தம் | நன்மை |
665 | சுக்கிரவாரம் | வெள்ளிக்கிழமை |
666 | சுக்கிலபஷம் | வளர்பிறை |
667 | சுக்கிலம் | வெண்ணீறு, வெண்மை |
668 | சுதந்திரம் | உரிமை |
669 | சுதேசம் | தாய்நாடு |
670 | சுத்தம் | தூய்மை, துப்புரவு |
671 | சுந்தரம் | அழகு |
672 | சுபாவம் | தன்மை, இயற்கை, இயல்பு |
673 | சுயபாஷை – தாய்மொழி | |
674 | சுபிஷம் – செழிப்பு | |
675 | சுயம்வரம் | தான் விரும்பும் மணம் |
676 | சுயார்ச்சிதம் | தான் தேடிய பொருள் |
677 | சுயேச்சை | தன் விருப்பம் |
678 | சுரஸம் | முறித்த சாறு |
679 | சுரம் | காய்ச்சல், வெப்புநோய் |
680 | சுருதி | குரல் |
681 | சுலபம் | எளிது |
682 | சுவதந்திரம் | உரிமை |
683 | சுவர்க்கம் | துறக்கம், பேரின்பவீடு |
684 | சுவாசகாசம் | இளைப்பிருமல் |
685 | சுவாசம் | மூச்சு, உயிர்ப்பு |
686 | சுவாதிஷ்டானம் | கொப்பூழ் |
687 | சுவீகாரம் | தனதாக்குதல் |
688 | சுவேதம் | வெண்மை |
689 | சுழுத்தி | உறக்கம் |
690 | சூக்குமம் | நுண்மை, அணு |
691 | சூசிகை | ஊசி, யானை, துதிக்கை |
692 | சூதகம் | தீட்டு |
693 | சூரணம் | தூள் |
694 | சூரியன் | ஞாயிறு, பகலவன், கதிரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன் |
695 | சூலம் | வேல் |
696 | சூன்யம் | பாழ், இன்மை, இல்பொருள் |
697 | சேஷம் | எச்சில், மிச்சம் |
698 | சேஷ்டன் | தமையன், மூத்தோன் |
699 | சேஷ்டை | குறும்பு, தமக்கை, அக்காள் |
700 | சேத்திரம் | திருக்கோயில், திருப்பதி |
701 | சேமம் | நலம், காவல், புதையல் |
702 | சேவகன் | காவற்காரன், போர் மறவன் |
703 | சேவித்தல் | தொழுதல், வணங்கல் |
704 | சேனாதிபதி | படைத்தலைவன், சேனைத்தலைவன் |
705 | சைந்யம் | படை |
706 | சைலம் | மலை |
707 | சொஸ்தம் | நலம், குணம் |
708 | சொப்பனம் | கனவு |
709 | சோதரன் | உடன்பிறந்தான் |
710 | சோதனை | ஆராய்ச்சி, ஆய்வு, தேர்வு |
711 | சோதி, ஜோதி | ஒளிவிளக்கம் |
712 | சோதிடர், சோசியர் | கோள்நூலார், காலக்கணிதர், குறிப்பாளர் |
713 | சோத்திரம் | செவி |
714 | சோபித்தல் | ஒளிர்தல், விளங்கல் |
715 | சோமன் | திங்கள், மதி |
716 | சோமவாரம் | திங்கட்கிழமை |
717 | சோலி(தெலு) | வேலை, தொழில் |
718 | சௌக்கியம் | நலம், மகிழ்ச்சி |
719 | சௌஜன்யம் | நல்லிணக்கம் |
720 | சௌந்தரம் | அழகு |
721 | சௌபாக்கியவதி | செல்வி, திருமகள் |
722 | ஞாதி – சுற்றம் | |
723 | ஞானம் | அறிவு, கல்வி, மெய்யுணர்வு, அருளறிவு |
724 | ஞாபகம் | நினைவு |
725 | தகநம் | எரித்தல், சுடுதல் |
726 | தக்கணம் | உடன், தெற்கு |
727 | தசாவதாரம் | பத்துப்பிறப்பு |
728 | தயை, தசா | ஊண், புலால் |
729 | தட்சிணாமூர்த்தம் | குருவடிவம், தென்முகக்கடவுள் |
730 | தட்சிணை, தக்கணை | காணிக்கை |
731 | தண்டனை | ஒறுப்பு, ஆணை, கட்டளை |
732 | தத்தம் | கொடுத்தல், ஈகை |
733 | தத்துவம் | உண்மை, மெய், பொருளியல் உண்மை |
734 | தநம், தனம் | செல்வம், பொருள், கொங்கை |
735 | தநவான் | செல்வன் |
736 | தந்தம் | பல் |
737 | தந்தி | கம்பி, மின்செய்தி, ஆண்யானை |
738 | தந்திரம் | சூழ்ச்சி, நூல் |
739 | தபசு, தவசு | தவம் |
740 | தபால் (இந்துஸ்) | அஞ்சல் |
741 | தமரகம் | உடுக்கை |
742 | தமாஷ் (இந்துஸ்) | பகடி, விளையாட்டு |
743 | தம்பதி | கணவனும் மனைவியும் |
744 | தம்பம், ஸ்தம்பம் | தூண் |
745 | தயவு, தயா, தயை | அன்பு, இரக்கம், கண்ணோட்டம் |
746 | தயிலம் | எண்ணெய் |
747 | தரா | நிலம், வையகம் |
748 | தராசு, திராசு | துலாக்கோல், நிறைக்கோல் |
749 | தரிசனம் | காட்சி, பார்வை, கண் |
750 | தரித்தல் | அணிதல், பூணல், உடுத்தல், மேற்கொள்ளல் |
751 | தரித்திரம் | வறுமை, எளிமை, நல்குரவு, மிடி, இன்மை |
752 | தருக்கம் | அளவை, அளவைநூல் |
753 | தருணம் – வேலை, பொழுது | |
754 | தருமம் | அறம் |
755 | தலம், ஸ்தலம் | இடம், கோயில், பதி |
756 | தலயாத்திரை | திருக்கோயிற்பயணம், திருக்கோயிற்செலவு |
757 | தற்சமயம் | இப்போது, இவ்வேளை |
758 | தாகம் | விடாய், நீர்வேட்கை |
759 | தாசன் | அடியான், அடிமை |
760 | தாநம், ஸ்தாநம் | இடம், இருக்கை |
761 | தாபரம், தாவரம் | நிலையியற்பொருள், நிற்பன, அசையாப்பொருள் |
762 | தாபித்தல் | நிறுவுதல், நாட்டல், நிலைநிறுத்தல் |
763 | தாமசம், தாமதம் | தாழ்த்தல், அட்டி, மயல் |
764 | தாமம் | கயிறு, மாலை |
765 | தாம்பரபரணி | பொருகை |
766 | தாரதம்மியம் | ஏற்றத்தாழ்வு |
767 | தாற்பாரியம் | கருத்துரை |
768 | தானம் | ஈகை, கொடை |
769 | தானியம் | கூலம் |
770 | திடம் | வன்மை, உறுதி |
771 | திட்டி,திருட்டி | கண், பார்வை, கண்ணேறு |
772 | திநம், தினம் | நாள், ஞான்று |
773 | தியாகம் | கொடை |
774 | தியானித்தல் | நினைத்தல், வழிபடல் |
775 | திரம், ஸ்திரம் | நிலை, உறுதி |
776 | திரயம் | மூன்று |
777 | திரவியம் | பொருள், செல்வம் |
778 | திராவகம் | செய்நீர், சாரம் |
779 | திராட்சை | கொடிமுந்திரி |
780 | திரி, ஸ்திரி | பெண் |
781 | திருட்டாந்தம் | சான்று, எடுத்துக்காட்டு, மேற்கோள் |
782 | திருத்தி, திருப்தி | மனநிறைவு,அமைவு, சால்வு |
783 | திரோபவம் | மறைத்தல் |
784 | திலகம் | பொட்டு |
785 | திவ்வியம் | நேர்த்தி, இனிமை, மேன்மை |
786 | தினசரி | நாடோறும் |
787 | தீபஸ்தம்பம் | விளக்குத்தண்டு, கலங்கரை விளக்கம் |
788 | தீபாராதனை | ஒளியால் வழிபடுகை |
789 | தீரம் | கரை |
790 | தீரன் | திண்ணியன், ஆண்டகை, திரனாளன் |
791 | தீர்க்கதரிசி | முக்காலவுணர்வினன், மெய்க்காட்சியாளன் |
792 | தீர்க்கம் | தெளிவு |
793 | தீர்த்தம் | புனிதநீர், திருக்குளம் |
794 | தீவாந்தரம் | தீவு, வெளி |
795 | தீவிரம் | விரைவு |
796 | துக்கம் | துன்பம், பரிவு, கவலை, வருத்தம், துயரம் |
797 | துஷ்டன் | தீயவன், பட்டி, வம்பன் |
798 | துதி, ஸ்துதி | வணக்கம், வழுத்துரை |
799 | துரிதம் | விரைவு |
800 | துரியம் | பேருறக்கம் |
801 | துரியாதீதம் | உயிர்ப்படக்கம் |
802 | துரோகம் | இரண்டகம், வஞ்சனை |
803 | துவசம் | கொடி |
804 | துவாரம் | வாயில், புழை, துளை |
805 | துவேஷம் | பகை, வெறுப்பு |
806 | தூஷணை | இகழ்ச்சி, பழி, பழிச்சொல் |
807 | தூதர் | ஒற்றர், வேவுகாரர் |
808 | தூபம் | புகை |
809 | தூபி, ஸ்தூபி | முடி, |
810 | தூரதிருஷ்டிக்கண்ணாடி | தொலைநோக்காடி |
811 | தூரம் | சேய்மை, தொலைவு, எட்டாக்கை |
812 | தூலம் | பருமை |
813 | தேகம் | உடல், யாக்கை, மெய் |
814 | தேகவியோகம் | சாக்காடு |
815 | தேகாப்பியாசம் | உடற்பயிற்சி |
816 | தேசசு | ஒளி |
817 | தேசம் | நாடு |
818 | தேயு | அனல் |
819 | தேவபக்தி, தெய்வபக்தி | கடவுட்பற்று, கடவுளிடத்தன்பு, தெய்வநேயம் |
820 | தேவன் | இறைவன், தலைவன் |
821 | தேவஸ்தானம் | கடவுள் நிலையம், கோயில் |
822 | தேவாதீனம் | கடவுட்செயல் |
823 | தேவி | இறைவி, அரசி, தலைவி |
824 | தைரியம் | உறுதி, திட்பம், ஆண்மை, ஊக்கம் |
825 | தைலம் | எண்ணெய் |
826 | தொக்கு | மெய்தோடம், |
827 | தோஷம் | குற்றம் |
828 | தோத்திரம் | வாழ்த்து, வழுத்து |
829 | நகல்(அராபி) – படி | |
830 | நகுலம் – கீரி | |
831 | நடராஜாமூர்த்தி, நடராஜன் | கூத்தன், அம்பலவாணன் |
832 | நட்சத்திரம் | மீன், வெள்ளி, நாள் |
833 | நட்டம், நஷ்டம் | கேடு, இழப்பு |
834 | நதி | ஆறு, யாறு |
835 | நந்தர் | இடையர் |
836 | நந்தவனம், நந்தனவனம் | பூந்தோட்டம், பூங்கா |
837 | நபர் (அராபி) | ஆள் |
838 | நமஸ்காரம் | வணக்கம் |
839 | நயம் | நன்மை |
840 | நயனம் | கண் |
841 | நரகம் | நிரயம், அளறு |
842 | நரன் | மனிதன் |
843 | நர்த்தனம் | கூத்து |
844 | நவக்கிரகம் | ஒன்பது கோள் |
845 | நவதானியம் | ஒன்பது வகைத்தவசம் |
846 | நவநீதம் | வெண்ணெய் |
847 | நவீனம் | புதுமை |
848 | நாகம் | பாம்பு |
849 | நாசம் | அழிவு, கேடு |
850 | நாசி | மூக்கு |
851 | நாஸ்திகன் | தெய்வமில்கொள்கையான் |
852 | நாதம் | ஒலி, ஓசை, செம்பால், செந்நீர் |
853 | நாதன் | தலைவன் |
854 | நாநாவிதம் | பலவகை |
855 | நாபிதன், நாவிதன் | மயிர்வினைஞன் |
856 | நாமம் | பெயர் |
857 | நாயகன் | தலைவன் |
858 | நாயகி | தலைவி |
859 | நாராசம் | இருப்பாணி |
860 | நாரிகேளம் | தேங்காய் |
861 | நிக்கிரகம் | அழிக்கை, ஒழிப்பு |
862 | நிசம் | உண்மை, மெய் |
863 | நிசி | இரவு |
864 | நிச்சயம் | உறுதி, மெய், துணிவு, திண்ணம், தேற்றம் |
865 | நிஷ்டூரம் | கொடுமை |
866 | நிதரிசனம் | கண்கூடு |
867 | நிதானம் | மதிப்பு |
868 | நிதி | செல்வம், வைப்பு, பொருள் |
869 | நித்தியம் | நாடோறும், எப்பொழுதும், அழியாமை |
870 | நித்திரை | தூக்கம், துயில், உறக்கம், கண்படை |
871 | நிந்தனை | இகழ்ச்சி, பழிப்பு |
872 | நிபந்தனை | கட்டுப்பாடு, உறுதி, ஏற்பாடு |
873 | நிபுணர் | தேர்ந்தவர், வல்லவர் |
874 | நிமிஷம் | நொடிப்பொழுது, நொடி |
875 | நிமித்தம் | குறி, காரணம், பொருட்டு, அடையாளம் |
876 | நியதி | ஊழ், செயகடன், முறை, ஒழுங்கு, பிறழா நிகழ்ச்சி |
877 | நியமம் | ஒழுங்கு, முறை, நெறி, நாட்கடன் |
878 | நியமனம் | கட்டளை, ஒழுங்கு |
879 | நியமித்தல் | அமைத்தல், ஏற்படுத்தல் |
880 | நியாயம் | நெறி, முறை, நடுநிலை |
881 | நியாதிபதி | முறைமன்றத்தலைவர், நடுவர் |
882 | நிருணயம் | உறுதி |
883 | நிருமூலம் | அடியற்றது, அழிவு, வேரோடு கல்லல் |
884 | நிருவாகம் | கொண்டு நடத்துதல், பொருப்பு |
885 | நிருவாணம் | உடையின்மை, முண்டம், பற்றின்மை |
886 | நிரூபித்தல் | மெய்ப்பித்தல், நிலைபெறுத்தல் |
887 | நிர்ப்பந்தம் | நெருக்கம், தொல்லை, இடர், வலுகட்டாயம் |
888 | நிவர்த்தி, நிவிர்த்தி | விடுதலை, நீக்கம் |
889 | நீசன் | கீழ்மகன், தாழ்ந்தோன் |
890 | நீதி | நெறி, முறை, அறம் |
891 | நீதிஸ்தலம் | முறைமன்றம் |
892 | நூதனம் | புதுமை |
893 | நேத்திரம் | கண் |
894 | பகவன, பகவான் | கடவுள், பெருமாள் |
895 | பகிஷ்காரம் | விலக்கு |
896 | பகிரங்கம் | வெளிப்படை |
897 | பக்குவம் | தகுதி, நிலை |
898 | பங்கஜம் | தாமரை, முளரி |
899 | பங்கம் | குறை, பழுது, சேறு, குற்றம் |
900 | பசார் (பார்சி) | சந்தை, அங்காடி |
901 | பசு | ஆ, உயிர் |
902 | பச்சாத்தாபம் | கண்ணோட்டம், கழிவிரக்கம் |
903 | பஞ்சபாதகன் | ஐம்பெருங்குற்றத்தான் |
904 | பஞ்சாட்சரம் | ஐந்தெழுத்து |
905 | பட்சணம் | தின்பண்டம |
906 | பட்சம் | உருக்கம், அன்பு |
907 | பட்சி | பறவை, புள் |
908 | பட்டாபிஷேகம் | முடிசூட்டல் |
909 | பண்டிகை | பெருநாள், திருவிழா |
910 | பண்டிதன் | புலவன், அறிஞன், மருத்துவன் |
911 | பதட்டம் | பதறுதல், விரைதல், அஞ்சல் |
912 | பதம் | சொல், விலை |
913 | பதார்த்தம் | சொற்பொருள், பொருள் |
914 | பதி | கடவுள் |
915 | பதிவிரதை | கற்பரசி |
916 | பதுமாவதி, பத்மாசநி | திருமகள் |
917 | பத்தர் | அன்பர, தொண்டர் |
918 | பத்தி, பக்தி | அன்பு, நேயம், பற்று |
919 | பத்தியம் | மருந்துணா, செய்யுள் |
920 | பத்திரம் | இல்லை, ஆவணம் |
921 | பத்திரிகை | செய்தித்தாள், செய்தி இதழ் |
922 | பந்தம் | உறவு, தொடர்பு, கட்டு |
923 | பந்தி | வரிசை, தொகுதி |
924 | பயங்கரம் | கொடுமை, அச்சம் |
925 | பயம் | அச்சம் |
926 | பரஸ்பரம் | ஒருவர்க்கொருவர் |
927 | பரதேசம் | பிறர்நாடு |
928 | பரமகதி | வீடுபேறு, மேல்நிலை |
929 | பரம்பரை | கால்வழி, தலைமுறை |
930 | பரவசம் | தன்னுணர்வின்னமை |
931 | பராக்கிரமசாலி | ஆண்டகை |
932 | பரிகாசம் | பகடி, ஏளனம் |
933 | பரிசம் | ஊறு |
934 | பரிசுத்தம் | தூய்மை, துப்புரவு, மாசின்மை, புனிதம் |
935 | பரிதாபம் | இரக்கம் |
936 | பரிமாணம் | அளவு |
937 | பரிமிதம் | அளவுபட்டது |
938 | பரீட்சை | தேர்வு |
939 | பருவதம், பர்வதம் | மலை |
940 | பரோபகாரம் | உதவி, கைம்மாறு கருதா உதவி |
941 | பர்த்தா | கணவன் |
942 | பலஹீனம் | வலுககுறைவு |
943 | பலம் | பலம், வலிவு |
944 | பலன் | பயன் |
945 | பலாத்காரம், பலவந்தம் | வலுகட்டாயம் |
946 | பலி | இறை, காணிக்கை, வேள்வி, கடவுளுணா, ஒப்புவித்தல் |
947 | பலித்தல் | கைகூடுதல், பயன்றருதல் |
948 | பவனம் | வீடு |
949 | பாக்கியம் | பேறு, செல்வம், நல்வினை |
950 | பாசம் – தளை, கட்டு, கயிறு, அன்பு | |
951 | பாஷை | மொழி |
952 | பாடாணம் | நஞ்சு |
953 | பாடியம், பாஷியம் | அகலவுரை, விரிவுரை, பேருரை |
954 | பாணி | கை |
955 | பாதகம் | தீமை |
956 | பாதம் | தாள், கால, அடி |
957 | பாதை | வழி, பாட்டை |
958 | பாத்தியம் | உரிமை |
959 | பாத்திரம் | ஏனம், களம, தகுதி, உரிமை |
960 | பாநகம் | பருகுநீர், குடிநீர் |
961 | பாபமோசனம் | தீவினைநீக்கம் |
962 | பாபி | தீயோன் |
963 | பாயுரு | எருவாய் |
964 | பாரம் | சுமை, பொறை, கடமை |
965 | பாரியா, பாரியை | மனைவி |
966 | பார்வதி | மலைமகள் |
967 | பாலகன் | குழந்தை |
968 | பாலப்பருவம் | பிள்ளைப்பருவம் |
969 | பால்யர் | இளைஞர் |
970 | பாவனை | கற்பனை, ஒப்பு, எண்ணம், நினைப்பு |
971 | பாஸ்கரன் | பகலோன் |
972 | பிங்கலை | வலதுமூச்சு |
973 | பிசாசு | பேய், அலகை |
974 | பிச்சை,பிட்சை | இரப்பு, ஐயம் |
975 | பிச்சைக்காரன் | இரப்போன் |
976 | பிஞ்ஞகம் | தலைக்கோலம் |
977 | பிடிவாதம் | விடாப்பிடி |
978 | பிதா | தந்தை, தகப்பன், அத்தன |
979 | பிதிரார்ச்சிதம் | முன்னோர் தேட்டம் |
980 | பிதிர்க்கடன் | மூதாட்கள் கடன், தென்புலத்தார் கடன் |
981 | பிநாகம் | வில் |
982 | பிந்நம் | சிதைவு, வேறுபாடு |
983 | பிரகடனம் | விளம்பரம் |
984 | பிரகதாம்பாள் | பெரியநாகயகி |
985 | பிரகஸ்பதி | வியாழன் |
986 | பிரகாசம் | ஒளி, துலக்கம், வெளிச்சம் |
987 | பிரகிருதி | இயற்கை, பகுதி |
988 | பிரக்கினை | உணர்வு |
989 | பிரசங்கம் | விரிவுரை, சொற்பொழிவு |
990 | பிரசண்டமாருதம் | பெரும்புயல், பெருங்காற்று |
991 | பிரசவம் | பிள்ளைப்பேறு, கருவுயிர்ப்பு |
992 | பிரசாதம் | படைப்பு, அருள் |
993 | பிரசாரம் | பரப்புதல் |
994 | பிரசித்தி | வெளிப்படை, அறிவிப்பு, புகழ்பாவல் |
995 | பிரசுரம் | வெளியீடு |
996 | பிரதட்சிணம் | வலம்வருதல் |
997 | பிரணவம் | ஓங்காரம் |
998 | பிரதானம் | முதன்மை, சிறப்பு |
999 | பிரதி | படி |
1000 | பிரதிகூலம் | மாறுபாடு, எதிர் |
1001 | பிரதிக்கினை | உறுதி, ஆணை, மேற்கோள் |
1002 | பிரதிஷ்டை | நிலைபெறுத்தல், கோயில் கொள்ளுவித்தல் |
1003 | பிரதிதினம் | நாடோறும், ஒவ்வொரு நாளும் |
1004 | பிரதிநிதி | ஆணையாளர் |
1005 | பிரதியுபகாரம் | கைம்மாறு |
1006 | பிரதிவாதி | எதிர் வழக்காளி |
1007 | பிரதேசம் | இடம் |
1008 | பிரத்தாபம் | அறிவித்தல், வெளிப்படுத்தல் |
1009 | பிரத்தியஷம் | கண்கூடு, தெளிவு |
1010 | பிரத்தியேகம் | தனிமை |
1011 | பிரபஞ்சம் | உலகம் |
1012 | பிரபந்தம் | நூல், நூற்றொகுதி |
1013 | பிரபல்லியம் | புகழ், முதன்மை, சிறப்பு |
1014 | பிரபாவம் | புகழ், பெருமை |
1015 | பிரபு | பெருந்தகை, பெருஞ்செல்வன், தலைவன் |
1016 | பிரமசாரி | மணமாகாதவன் |
1017 | பிரமா | நான்முகன் |
1018 | பிரமாணம் | அளவை, தலைமை, மேற்கோள், ஆணை, கட்டளை |
1019 | பிரமாண்டம் | பேருலகம் |
1020 | பிரமாதம் | மிகுதி |
1021 | பிரமானந்தம் | பேரின்பம் |
1022 | பிரமித்தல் | மலைத்தல், திகைத்தல், மருளல் |
1023 | பிரமேயம் | அளக்கப்படும் பொருள் |
1024 | பிரமை | மயக்கம், அறியாமை |
1025 | பிரமோற்சவம் | பெருவிழா |
1026 | பிரயத்தனம் | முயற்சி |
1027 | பிரயாசை | முயற்சி, வருத்தம், பாடு, உழைப்பு, தொல்லை |
1028 | பிரயாணம் | பயணம், வழிப்போக்கு, வழிச்செலவு, செலவு |
1029 | பிரலாபம் | புலம்பல் |
1030 | பிரவர்த்தி | முயற்சி, செய்கை |
1031 | பிரவாகம் | வெள்ளப்பெருக்கு |
1032 | பிரவேசம் | நுழைவு, முயற்சி |
1033 | பிரளயம் | அழிவுகாலம், உலக ஒடுக்கம், வெள்ளம் |
1034 | பிரளயாகலர் | இருமலக்கட்டினர் |
1035 | பிரகாரம் | கோயிற்சுற்று |
1036 | பிராகாமியம் | நிறைவுண்மை |
1037 | பிராணவாயு | உயிர்க்காற்று, உயிர்வளி, உயிர்ப்பு |
1038 | பிராணி | உயிரி, சிற்றுயிர் |
1039 | பிராது (அராபி) | முறையீடு, முறைப்பாடு |
1040 | பிராப்தம் | ஊழ்வினை |
1041 | பிராப்தி | விரும்பியதெய்தல் |
1042 | பிராமணன் | பார்ப்பான் |
1043 | பிரார்த்தனை | நேர்த்திக்கடன், வேண்டுகோள் |
1044 | பிரியம் | அன்பு, விருப்பம் |
1045 | பிரீதி | அன்பு, உருக்கம், அவா |
1046 | பிருதிவி | மண் |
1047 | பிரேதம் | பிணம் |
1048 | பிரேரேபித்தல் | முன்மொழிதல் |
1049 | பீசம் | முளை, விதை |
1050 | பீடம் | இருக்கை, மேடை |
1051 | பீடை – துன்பம், பீழை, நோய் | |
1052 | பீதாம்பரம் | பொற்பட்டாடை |
1053 | புஸ்தகம், புத்தகம் | சுவடி, நூல் |
1054 | புஷ்டி | பருமன், தடிப்பு |
1055 | புட்பம், புஷ்பம் | பூ, மலர் |
1056 | புட்பராகம் | வெள்ளைக்கல் |
1057 | புட்பவதி | பூப்பானவள் |
1058 | புண்ணிய திநம் | நன்னாள் |
1059 | புண்ணிய பாவம் | நல்வினை தீவினை, அறம் மறம் |
1060 | புதன் | அறிவன் |
1061 | புத்தி | உணர்ச்சி, அறிவு |
1062 | புத்திரன் | புதல்வன், மகன், மைந்தன், கான் முளை |
1063 | புத்திரி | புதல்வி, மகள் |
1064 | புயபலம், புஜபலம் | தோள்வலி |
1065 | புராணம் | பழங்கதை, பழைய, வரலாறு |
1066 | புராதனம் | பழமை, தொன்மை |
1067 | புருடன் | ஆண்மகன், கணவன் |
1068 | புருடார்த்தம் | உறுதிப்பொருள் |
1069 | புரோகிதன் | வேள்வி செய்வோன் |
1070 | புவனி, புவி | இடம் |
1071 | புனர்ப்பாகம் | சோற்றின் மறுபால், தெளு |
1072 | பூகம்பம் | நிலா நடுக்கம் |
1073 | பூகோள சாஸ்திரம் | நிலநூல் |
1074 | பூசாரி | வழிபாடு செய்வோன் |
1075 | பூசை | வழிபாடு, வணக்கம் |
1076 | பூஷணம் | அணிகலன், அணி |
1077 | பூச்சியம் | இன்மை, அருமை |
1078 | பூதம் | முதற்பொருள், முதல், புலன், பேய் |
1079 | பூமி | நிலம், உலகு |
1080 | பூரணம் | நிறைவு, எல்லாம் |
1081 | பூரித்தல் | நிறைதல் |
1082 | பூர்த்தி | முடிவு, நிறைவு |
1083 | பூர்வ சென்மம் – முன்பிறப்பு | |
1084 | பூர்வபஷம் | வளர்பிறை |
1085 | பூர்விகம் | பழமை |
1086 | பேதம் | ஒவ்வாமை, வேற்றுமை, வேறுபாடு |
1087 | பைத்தியம் | பித்து, வெறி, கோட்டி |
1088 | பொக்கிஷம் (தெலு) | பொருட்களஞ்சியம், பொக்கிஷசாலை, கருவூலம் |
1089 | போகம் | இனபம், துய்ப்பு, நுகர்பொருள் |
1090 | போசனம் | உணவு, சோறு, உண்டி, ஊண் |
1091 | போஷகர் | ஊட்டகர் |
1092 | போஷணை | நுகர்பொருள் |
1093 | போதனை | கற்பனை |
1094 | போதை | வெறி, மயக்கம் |
1095 | பெளதிகசாஸ்திரம் | இயற்கைப்பொருள் நூல் |
1096 | பெளத்திரன் | பேரன் |
1097 | பெளத்திரி | பேர்த்தி |
1098 | பெளர்ணமி, பூரணை | முழுநிலா |
1099 | பெளவம் | கடல் |
1100 | வகித்தல் | பொறுத்தல், பூணல், ஏற்றல் |
1101 | வக்கிரம் | வளைவு |
1102 | வசநம் | உரைநடை |
1103 | வசந்தம் | தென்றல்காற்று, மணம் |
1104 | வசித்தல் | உறைதல், வாழ்தல் |
1105 | வசியம், வசீகரம் | கவர்ச்சி |
1106 | வச்சிரம் | உறுதியானது |
1107 | வஸ்திரம் | ஆடை, துணி, கூறை |
1108 | வஸ்து | பொருள் |
1109 | வண்ணம், வர்ணம் | நிறம், எழில், அழகு |
1110 | வதந்தி | பேச்சு, பலரறிசொல் |
1111 | வதுவை | மணம், மணப்பெண் |
1112 | வது | பெண் |
1113 | வநம் | காடு |
1114 | வநவாசம் | காடுறை வாழ்க்கை |
1115 | வந்தனம் | வணக்கம், வழிபாடு |
1116 | வந்தனோபசாரம் வணக்கவுரை | |
1117 | வமிசம், வம்சம் | கால்வழி, பரம்பரை, தலைமுறை |
1118 | வயசு, வயது | ஆண்டு, அகவை |
1119 | வயம் | அதுவாதல், வழி |
1120 | வயிரம் | கூர்மை, ஒளிமணிக்கல், காழ்ப்பு |
1121 | வயோதிகம் | முதுமை |
1122 | வரம் | பேறு, மேன்மை, அருள் |
1123 | வருக்கம், வர்க்கம் | இனம், வகுப்பு, ஒழுங்கு |
1124 | வருடம் | ஆண்டு |
1125 | வருணம் | நிறம், குலம் |
1126 | வருணனை | ஒப்பனை |
1127 | வர்த்தமானம் | செய்தி |
1128 | வல்லபம் | வலிமை, ஆற்றல், திறம் |
1129 | வாகனம் | ஊர்தி, அணிகம் |
1130 | வாக்கியம் | சொற்றொடர் |
1131 | வாக்கு, வாயுரை | சொல், மொழி |
1132 | வாக்குத்தத்தம் | உறுதிமொழி |
1133 | வாகுமூலம் | உறுதிச்சொல் |
1134 | வாசகம் | சொல் |
1135 | வாசம் | மணம், இருப்பு |
1136 | வாசனை | மணம் |
1137 | வாஞ்சை | விருப்பம், அவா |
1138 | வாதம் | காற்று, குளிர்ச்சி, காற்றுப்பிடிப்பு, வழக்கு |
1139 | வாதனை | துன்பம், வருத்தம் |
1140 | வாதிதல் | வழக்கிடுதல் |
1141 | வாத்சல்யம் | அன்பு, விருப்பம் |
1142 | வாத்தியம் | இசைக்கருவி |
1143 | வாநரம் | குரங்கு |
1144 | வாந்தி | வாயாலெடுப்பு, கக்கல் |
1145 | வாந்தி பேதி | கக்கற் கழிச்சல் |
1146 | வாமம் | அழகு, இடப்பக்கம் |
1147 | வாயு | கால, காற்று |
1148 | வாரம் | கிழமை, அன்பு |
1149 | வாராவதி | பாலம் |
1150 | வார்த்தை | சொல் |
1151 | வாலிபம் | இளமை |
1152 | விகடன் | பகடி, வேடிக்கை |
1153 | விகற்பம், விகாரம் | வேறுபாடு |
1154 | விகாரம் | அழகின்மை, வேறுபாடு |
1155 | விகிதம் | நேயம், நட்பு, விழுக்காடு |
1156 | விக்கிரமம் | உருவம், பருப்பொருளுரு |
1157 | விக்கிநம் | இடையூறு, தீங்கு |
1158 | விஜயம் | வெற்றி, எழுந்தருளல் |
1159 | விசாரணை | ஆராய்ச்சி, கேள்வி |
1160 | விசாரம் | கவலை, எண்ணம் |
1161 | விசாலம், விஸ்தீரணம் | விரிவு, அகலம, பெருக்கம் |
1162 | விசித்திரம் | வியப்பு, புதுமை |
1163 | விசுவாசம் | நம்பிக்கை, உண்மை |
1164 | விசேடம் | மேன்மை, சிறப்பு |
1165 | விச்சை, வித்தை | அறிவு |
1166 | விஞ்ஞாபனம் | விண்ணப்பம், முறையீடு, வேண்டுகோள் |
1167 | விடம், விஷம் | நஞ்சு |
1168 | விடயம், விஷயம் | பொருள், நுதலிய பொருள் |
1169 | விட்டுணு, விஷ்ணு | திருமால் |
1170 | விதண்டாவாதம் | அழிவழக்கு |
1171 | விதந்து, விதவை | கைம்பெண், அருதாலி |
1172 | விதம் | வகை, ஆறு, வழி |
1173 | விதி | ஊழ், தெய்வம், முறை, செயற்கை, கட்டளை |
1174 | விதேயன் | பணிவுள்ளவன் |
1175 | விஸ்தாரம் | விரிவு |
1176 | வித்தியாசம் | வேறுபாடு, ஏற்றத்தாழ்வு, வேற்றுமை |
1177 | வித்துவான் | புலவன் |
1178 | விந்து | ஒலிமுதல் |
1179 | விநயம் | வணக்கம், அறிவு |
1180 | விநாயகர் | பிள்ளையார் |
1181 | விநாயகர் சதுர்த்தி | பிள்ளையார் நோன்பு |
1182 | விந்தை, வினோதம் | புதுமை |
1183 | விபத்து | இக்கட்டு, இடையூறு |
1184 | விபரீதம் | வேறுபாடு, திரிபு |
1185 | விபூதி | திருநீறு, நீறு |
1186 | விமோசனம் | நிகம், விடுதலை |
1187 | வியபிசாரி | ஒழுக்கமிலான் |
1188 | வியவகாரம் | வழக்கு |
1189 | வியாக்கியாநம் | விரிவுரை |
1190 | வியாசம் | கட்டுரை |
1191 | வியச்சியம் | வழக்கு |
1192 | வியாஜம் | தலைக்கீடு |
1193 | வியாதி | நோய், பிணி |
1194 | வியாபாரம் | வாணிபம், கொண்டுவிற்றல், பண்டமாற்று |
1195 | விரதம் | நோன்பு, தவம் |
1196 | விருச்சிகம் | தேள் |
1197 | விருட்சம் | மரம் |
1198 | விருத்தன் | கிழவன், முதியோன் |
1199 | விருத்தாசலம் | பழமலை |
1200 | விருத்தாந்தம் | வரலாறு |
1201 | விருத்தி | ஆக்கம், பெருக்கம் |
1202 | விரோதம் | பகை, முரண், மாறுபாடு |
1203 | விலாசம் | முகவரி |
1204 | விவகாரம் | வாய்பாடு, வழக்கு |
1205 | விவசாயம் | பயிர்த்தொழில், உழவுத்தொழில், வேளாண்மை |
1206 | விவரணம் | விளக்கம் |
1207 | விவாகம் | திருமணம், மன்றல் |
1208 | விவாதம் | வழக்கு |
1209 | விவேகம் | பகுத்தறிவு, அறிவு |
1210 | வீதம், விகிதம் | விழுக்காடு |
1211 | வீதி | தெரு |
1212 | வீரர் | மள்ளர், மறவர் |
1213 | வீரியம் | மறம், ஆண்மை |
1214 | வெகுமானம் | பரிசு, கொடை |
1215 | வேகம் | விரைவு |
1216 | வேடம், வேஷம் | கோலம் |
1217 | வேதனம் | கூலி |
1218 | வேதனை | துன்பம் |
1219 | வேதாந்தம் | மறைமுடிவு |
1220 | வேதாரண்யம் | மறைக்காடு |
1221 | வேதியர் | அந்தணர், பார்ப்பார் |
1222 | வைகுண்டம் | திருமாலுலகு |
1223 | வைசூரி | அம்மைநோய் |
1224 | வைடூரியம் | பூனைக்கண்மணி, ஒளிமணி |
1225 | வைதிகம் | மறையியல் நெறி |
1226 | வைத்தியம் | மருத்துவம் |
1227 | வைபவம் | கொண்டாட்டம், நிகழ்ச்சி |
1228 | வைராக்கியம் | வெறுப்பு |
1229 | மகத்துவம் | மேன்மை |
1230 | மகாராசன் | அரசன், செல்வன் |
1231 | மகா | பெரிய, மிகுதி, மேன்மை |
1232 | மகாத்மா | பெரியோன் |
1233 | மகிமா | பருமை |
1234 | மகிமை | பெருமை, மேன்மை |
1235 | மகுடம் | தலையணி, முடி |
1236 | மசானம், மயாநம் | சுடுகாடு |
1237 | மச்சம் – மீன் | |
1238 | மணிபூரகம் | மேல் வயிறு |
1239 | மண்டூகம் | தவளை |
1240 | மதம் | கொழுப்பு, கொள்கை |
1241 | மது | கள், தேன் |
1242 | மதுகரம் | வண்டு |
1243 | மத்திபம், மத்திமம் | நடுநிலை, நடு |
1244 | மத்தியானம் | நண்பகல் |
1245 | மநசு | உள்ளம், மனம் |
1246 | மநஸ்தாபம் | துன்பம், மனவருத்தம் |
1247 | மநநம் | இடையறா நினைவு |
1248 | மநப்பூர்வம் | முழுமனது |
1249 | மநோகரம் | உள்ளக்கவர்ச்சி |
1250 | மநோராச்சியம் | மனக்கோட்டை, வீண் எண்ணம் |
1251 | மந்தம் | செரியாமை, சோம்பல் |
1252 | மந்தாரம் | மப்பு, மழைவானம் |
1253 | மந்திரம் | மறைமொழி |
1254 | மந்திரி | அமைச்சன் |
1255 | மமகாரம் | எனதென்றல் |
1256 | மரணபரியந்தம் | இறக்குமளவும் |
1257 | மரணம் | சாவு, இறப்பு, சாக்காடு |
1258 | மாசூல் (இந்துஸ்) | விளைவு |
1259 | மாதம் | திங்கள் |
1260 | மாதா | தாய், அன்னை |
1261 | மாதாந்தம் | திங்களிறுதி |
1262 | மாத்திரம் | மட்டும் |
1263 | மாத்திரை | அளவு |
1264 | மாநபங்கம் | பெருமைக்குறைவு, மானக்கேடு |
1265 | மாநியம் | இறையிலி நிலம் |
1266 | மாந்தம் | செரியாமை |
1267 | மாமிசபட்சணம் | ஊனுணா |
1268 | மாமிசம் | இறைச்சி, ஊன், புலால் |
1269 | மாலுமி | மீகாமன் |
1270 | மிதம | அளவு, மட்டு |
1271 | மித்திரன், மித்துரு | நட்பு, நண்பு |
1272 | மிருகம் | விலங்கு |
1273 | மிருதங்கம் | மத்தளம் |
1274 | மிருது | மென்மை, நொய்மை |
1275 | மிலேச்சன் | அறிவிலான், வேடன் |
1276 | மீனாட்சி | கயற்கண்ணி |
1277 | முகஸ்துதி | முகமன் |
1278 | முகூர்த்தம் | முழுத்தம், நல்வேளை |
1279 | முக்கியம் | முதன்மை |
1280 | முத்தி | வீடுபேறு |
1281 | முத்திரை | அடையாளம், பொறி |
1282 | மூடர் | அறிவிலார் |
1283 | மூர்க்கன் | அறிவிலான், முருடன் |
1284 | மூர்ச்சை | அறிவு மயக்கம், களைப்பு, உணர்ச்சியின்மை |
1285 | மூர்த்தி | கடவுள் |
1286 | மூலதனம் | முதற்பொருள், விடுமுதல் |
1287 | மேகம் | முகில், எழிலி, வான் |
1288 | மேடம் | ஆடு |
1289 | மோகம் | அவா, மயக்கம், பெருவேட்கை, விருப்பம், மருள் |
1290 | மோட்சம் | வீடு, துறக்கம் |
1291 | மெளனம் | அடக்கம், பேசாமை |
1292 | யசமானன் | தலைவன் |
1293 | யதார்த்தம் | மெய், உண்மை |
1294 | யதேச்சை | விருப்பம், இயற்கை |
1295 | யத்தனம் | முயற்சி |
1296 | யாகம் | வேள்வி |
1297 | யாசகம் | இரப்பு |
1298 | யாதவன் | இடையன் |
1299 | யாத்திரை | வழிச்செலவு , வழிப்பயணம், ஊர்ப்பயணம் |
1300 | யுகம் | ஊழி |
1301 | யுத்தகளம் | போர்முனை, அமர்க்களம் |
1302 | யுத்தி, யுக்தி | சூழ்ச்சி, பொருந்துமாறு |
1303 | யூகம் | நுண்ணறிவு, சூழ்ச்சி, கருங்குரங்கு |
1304 | யோகஷேமம் | நலச்செய்தி |
1305 | யோகம் | தவநிலை, ஒன்றுதல், மனவொருக்கம், நல்வினை |
1306 | யோக்கியம், யோக்கியதை | தகுதி |
1307 | யோசனை | ஓர்வு, ஆராய்ச்சி, சூழ்ச்சி |
1308 | ரசம் | சுவை |
1309 | ரசீது | பற்றுமுறி |
1310 | ரஸ்தா | பெரியதெரு, பாட்டை |
1311 | ரணம் | போர், புண் |
1312 | ருசுப்படுத்தல் | மெய்ப்பித்தல் |
1313 | ருதுமங்களஸ்நானம் | பூப்புநீராட்டு |
1314 | ரூபம் | வடிவம் |
தனித்தமிழ்
Wednesday, 21 June 2017
Subscribe to:
Posts (Atom)